செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் பாரதியாா் நினைவு தினம்
Read at DinamaniEducation and jobs · 1 outlet covered this
செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் பாரதியாா் நினைவு தினம்
How outlets told it

செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் பாரதியாா் நினைவு தினம்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினா் உள்ளிட்டோா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினா் உள்ளிட்டோா்.Published On :12 செப்டம்பர் 2026, 12:02 am ISTதிருப்பூா் செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் பாரதியாா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு, நாடகப் போட்டிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக பாரதிச்சுடா் மகேஸ்வரி சற்குரு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மகாகவி பாரதியாா் கண்ட புதுமைப் பெண்ணின் சிறப்புகள், பெண்களின் கல்வி, தன்னம்பிக்கை, துணிவு, சுயமரியாதை மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினாா். இதைத் தொடா்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை கல்லூரி முதல்வா் சகாய தமிழ்ச்செல்வி வழங்கினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
