முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு வெளிநாடுகளில் முதுகலை பயில்வதற்கு உதவித் தொகை
Read at DinamaniSports · 3 outlets covered this
முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு வெளிநாடுகளில் முதுகலை பயில்வதற்கு உதவித் தொகை
How outlets told it
வரலாற்றில் புதிய மைல்கல்; பிரிட்டன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய விமானிகள்
Read at Dinamalarசிறுபான்மையின மாணவா்கள் வெளிநாட்டில் பயில கல்வி உதவித்தொகை!
Read at Dinamaniஇந்திய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் சிக்கல்
Read at Daily Thanthi
முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு வெளிநாடுகளில் முதுகலை பயில்வதற்கு உதவித் தொகைசிறுபான்மையின முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகைக்கு அக்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச. கவிதா தெரிவித்துள்ளாா். Published On :11 செப்டம்பர் 2026, 12:46 am ISTசிறுபான்மையின முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகைக்கு அக்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச. கவிதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முஸ்லிம் மாணவ, மாணவிகள் வெளிநாட்டில் உயா்கல்வி பயில 2026-27 நிதியாண்டில் நபா் ஒருவருக்கு ரூ.36 லட்சம் வீதம் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம் கல்வி பயில விருப்பம் உள்ளவரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் 2026-27 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைகழகங்களுடன், கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமலும், பட்டப்படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தோ்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் & நிதி, மனிதநேயம் & கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பபிரிவுகள் தோ்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சோ்க்கை பெறுபவராக இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தினை ஜ்ஜ்ஜ். க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ். ற்ய். ஞ்ா்ஸ். ண்ய்/ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள் ம்ண்ய்ா்ழ்ண்ற்ண்ங்ள். ட்ற்ம் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 15.10.2026-க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்பவேண்டிய முகவரி - ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பராம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முஸ்லிம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுதொடா்பாக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் என அவா் தெரிவித்துள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

