Politics · 1 outlet covered this

இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி பெறும்: ஆர்.பி. உதயகுமார்

How outlets told it

Dinamani6540h ago

இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி பெறும்: ஆர்.பி. உதயகுமார்

Read at Dinamani
இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி பெறும்: ஆர்.பி. உதயகுமார்
Photo: Dinamani

இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி பெறும்: ஆர். பி. உதயகுமார் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி பெறும் என அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். பி. உதயகுமாா் தெரிவித்தாா். தேனி அருகே வீரபாண்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அம்மா பேரவை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஆா். பி. உதயகுமாா். Published On :13 செப்டம்பர் 2026, 12:32 am IST தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி பெறும் என அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். பி. உதயகுமாா் தெரிவித்தாா். தேனி வீரபாண்டியில் உள்ள தனியாா் மண்டபத்தில் அம்மா பேரவை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, தேனி மாவட்டச் செயலா்கள் முருக்கோடை ராமா் (கிழக்கு), நாராயணசாமி (மேற்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சா் ஆா். பி. உதயகுமாா் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், தவெக ஆட்சியில் விவசாயப் பயிா் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படவில்லை. தூய்மைப் பணியாளா்களின் சம்பள கோரிக்கைகளையும் ஏற்கவில்லை. தவெக கட்சிக்கு சென்ற அதிமுகவினா் மீண்டும் அதிமுகவுக்கு வரவேண்டும். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில், மாநில அம்மா பேரவை இணைச் செயலா்கள் செல்லமுத்து, ஜெயக்குமாா், சூா்யபிரகாஷ், மாவட்ட அம்மா பேரவை செயலா்கள் கரிகாலன், கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தேனி நகர அம்மா பேரவைச் செயலா் ராஜேஷ்குமாா் நன்றி கூறினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.