ஆசிய பாட்மிண்டன்: இந்திய வீராங்கனை தன்வி பத்ரி முதலிடம்
Read at The Hindu TamilSports · 1 outlet covered this
ஆசிய பாட்மிண்டன்: இந்திய வீராங்கனை தன்வி பத்ரி முதலிடம்
How outlets told it

செங்டு: ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை தன்வி பத்ரி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
சீனாவின் செங்டு நகரில் 15, 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன.
நேற்று நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோர் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் தன்வி பத்ரி 11-15, 15-10, 15-12 என்ற செட் கணக்கில் சகநாட்டு வீராங்கனையான ஷைனா மணிமுத்துவைத் தோற்கடித்து பட்டம் வென்றார்.
ஒடிசாவைச் சேர்ந்த தன்வி பத்ரி இந்த ஆண்டில் போன்டியானக் சர்வதேச சாலஞ்ச், பெங்களூருவில் நடைபெற்ற அகில இந்திய ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) பாட்மிண்டன் போட்டிகளிலும் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
15 வயதுக்குட்பட்ட ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் தோல்வி கண்டதன் மூலம் இந்தியாவின் ஆதித்யா சிங் நேகி, தன்மய் வர்மா ஜோடி வெண்கலம் வென்றது. அரை இறுதிப் போட்டியில் ஆதித்யா, தன்மய் ஜோடி 5-15, 10-15 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் போ லின் ஹோ, ஜுய் என் ஹவ் ஜோடியிடம் தோல்வி கண்டது.
பிரதமர் மோடியுடன் பள்ளித் தோழர் திடீர் சந்திப்பு
