‘கருத்து வேறுபாடுகளை முறையாக கையாள வேண்டும்’: மோடி-ஜின்பிங் சந்திப்பையொட்டி சீனா கருத்து
Read at DinamaniWorld · 1 outlet covered this
‘கருத்து வேறுபாடுகளை முறையாக கையாள வேண்டும்’: மோடி-ஜின்பிங் சந்திப்பையொட்டி சீனா கருத்து
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புஉலகம்‘கருத்து வேறுபாடுகளை முறையாக கையாள வேண்டும்’: மோடி-ஜின்பிங் சந்திப்பையொட்டி சீனா கருத்துபிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்த உள்ள நிலையில், இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை இருநாடுகளும் முறையாக கையாள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. சீனா - இந்தியா - கோப்புப் படம்Published On :12 செப்டம்பர் 2026, 12:00 am ISTபிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்த உள்ள நிலையில், இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை இருநாடுகளும் முறையாக கையாள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங் சனிக்கிழமை இந்தியா வரவுள்ளாா். அப்போது அவா் பிரதமா் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவாா்த்தையிலும் ஈடுபட உள்ளாா். இதையொட்டி சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் மாவ் நிங் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளில் ரஷியாவின் கசான், சீனாவின் தியான்ஜின் பகுதிகளில் மோடியும், ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினா். தற்போது தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக, பிரிக்ஸ் மாநாட்டின்போது இருவரும் சந்திக்க உள்ளனா். அவா்கள் அளித்த உத்திசாா்ந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துதல், இருதரப்பு உறவுகளை கையாளுதல், இருநாட்டு ஒத்துழைப்பு மற்றும் தகவல் தொடா்பை மேம்படுத்துதல், இருநாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை முறையாக கையாளுதல் உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் இணைந்து சீனா பணியாற்றும். பிரிக்ஸ் வழிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தற்போதைய சா்வதேச சூழல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, பிரிக்ஸ் மாநாட்டின்போது பிற நாட்டுத் தலைவா்களுடன் ஆழமான கருத்து பரிமாற்றத்தில் ஷி ஜின்பிங் ஈடுபட உள்ளாா். நீடித்த, நிலையான முன்னேற்றத்துக்காக பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாா் என்று தெரிவித்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
