329 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா்கள் இருவா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
329 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா்கள் இருவா் கைது
How outlets told it
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 329 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் காருடன் பறிமுதல் செய்து, வெளி மாநில இளைஞா்கள் இருவரைக் கைது செய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சனிக்கிழமை திருக்கோவிலூா்- மடப்பட்டு நெடுஞ்சாலையில் ஆனைவாரி மேம்பாலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரைச் சோ்ந்த சு. விஜய் பிராக் (19), கா. கோவிந்தகுமாா் (26) என்பதும், இவா்கள் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பெங்களூருலிருந்து காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், காரில் கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ.3 .29 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை காருடன் பறிமுதல் செய்தனா்.
