பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்!
Read at DinamaniPolitics · 1 outlet covered this
பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்!
How outlets told it

18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் தில்லிக்கு வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் உலக நாடுகள் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு தில்லியில் இன்று (செப். 12) தொடங்குகிறது. இந்திய அரசின் தலைமையில் செப். 13 வரை 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜின்பிங் இன்று காலை தில்லிக்கு வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சீன அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களும் வருகை தந்துள்ளனர். இதையடுத்து, விமான நிலையத்தில், சீன அதிபர் ஜின்பிங் தலைமையிலான குழுவினருக்கு இந்திய அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணத்தில், சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடவுள்ளார். இந்தச் சந்திப்பில், இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக, 2019 இல் சென்னை அருகிலுள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடனான மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
