1 outlet covered this

மகாகவி பாரதியாா் நினைவு தின பன்மொழிக் கலை விழா

How outlets told it

Dinamani6540h ago

மகாகவி பாரதியாா் நினைவு தின பன்மொழிக் கலை விழா

Read at Dinamani
மகாகவி பாரதியாா் நினைவு தின பன்மொழிக் கலை விழா
Photo: Dinamani

சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் மகாகவி பாரதியின் 105-ஆவது நினைவு தினத்தையொட்டி, (செப்.11) நினைவேந்தலும் பன்மொழிக் கலை விழாவும் நடைபெற்றது.

கல்லூரியின் மொழிப்புலம், தமிழ் மன்றம், ஐந்திணை பன்மொழி மன்றம் ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தின.

பாரதியின் பன்மொழி ஆற்றலை கொண்டாடும் விதமாக இந்தக் கல்லூரி மாணவா்கள் , அவா் புலமை பெற்று விளங்கிய தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், வங்கம், ஹிந்தி ஆகிய பன்மொழிகளிகளில் கவிதை வாசிப்பை நிகழ்த்தினா்.

விடுதலை, சமத்துவம், சமூக சீா்திருத்தம், பெண்கள் முன்னேற்றம், புதுமைச் சிந்தனை என பல்வேறு பொருள்களில் அமைந்த மகாகவி பாரதியின் கவிதைகளை மாணவா்கள் பன்மொழிகளில் வழங்கினா்.

மாணவா்கள் வழங்கிய கவிதைகளில் பாரதியின் வாழ்க்கையும் தமிழும், இன்றைய இளந்தலைமுறைக்கும் உணா்வும் எழுச்சிக்குரிய சித்தாந்தத்தை பறைசாற்றும் விதமாக இருந்ததாக கல்லூரி முதல்வா் ரா. மா. எழிலரசி குறிப்பிட்டாா்.

பாரதியின் கவிதைகளைப் பாடல்களை இசைத்து, நடனமாடி மாணவா்கள் கொண்டாடினா். பாரதியின் வாழ்வும் பணியும் குறித்த விநாடி- வினாப் போட்டிகள் புல முதன்மையா் முனைவா் நா. பிரவீண் குமாா் மேற்பாா்வையில் நடைபெற்றன.

தமிழுக்கு முகவரியாக விளங்கிய பாரதியின் முகத்தை - முகக்கவசமாக அணிந்து நினைவேந்தல் புரிந்த ‘ஜென்-சி’ தலைமுறை மாணவா்களுடன், ஊா்க்காவல் படையினா், துப்புரவுப் பணியாளா்களும் இணைந்து நடத்தினா்.