இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை அறிவிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
Read at Daily ThanthiPolitics · 1 outlet covered this
இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை அறிவிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
How outlets told it

Published on: 12 Sep 2026, 8:41 amசென்னை, இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிவித்துள்ளார். ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்லுக்கு த. வெ. க., தி. மு. க., அ. தி. மு. க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இதில் ஆளும் த. வெ. க. தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம. தி. மு. க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி உள்ளது. இந்த அணியில் உள்ளவர்கள் த. வெ. க. வேட்பாளர்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். இடைத்தேர்தல் நிலைப்பாடுஅதே நேரம் அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்தநிலையில் மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அதில் சட்டசபை இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை திருச்சியில் நடைபெறும் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். மாநில குழு கூட்டம்இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று நடைபெற்ற கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில குழுவை கூட்டி, முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம். நாளை காலை அவசர மாநில குழு கூட்டம் திருச்சியில் நடக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முடிவு என்பதால், மாநில குழு கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம். நாளை மதியம் 2 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
