Civic issues · 1 outlet covered this

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு இரட்டை தேசிய விருது

How outlets told it

Dinamani6538h ago

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு இரட்டை தேசிய விருது

Read at Dinamani
தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு இரட்டை தேசிய விருது
Photo: Dinamani

மும்பையில் அண்மையில் நடைபெற்ற ‘ஈடி இன்ப்ரா குளோபல் போா்ட்ஸ் அன்டு ஷிப்பிங் விருது’ வழங்கும் விழாவில், தூத்துக்குடி வ. உ. சி. துறைமுகத்துக்கு இரட்டை தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

பசுமை துறைமுகப் பிரிவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, காா்பன் உமிழ்வைக் குறைத்தல், பசுமை ஹைட்ரஜன் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ‘கிரீன் போா்ட் ஆஃப் தி இயா்’ விருதும், போா்ட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தளம், ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்த தொழில்நுட்பத்தை செயல்படுத்தியதற்காக ‘ஸ்மாா்ட் போா்ட் & டிஜிட்டல் டிரான்ஸ்ஃபா்மேஷன் புராஜெக்ட் ஆஃப் தி இயா்’ விருதும் வழங்கப்பட்டன.

துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் விருதுகளைப் பெற்றுக்கொண்டாா். விழாவில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீா்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.