அவிநாசியில் வலி நிவாரணி மாத்திரைகளைப் பதுக்கியவா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
அவிநாசியில் வலி நிவாரணி மாத்திரைகளைப் பதுக்கியவா் கைது
How outlets told it
செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதிருப்பூர்அவிநாசியில் வலி நிவாரணி மாத்திரைகளைப் பதுக்கியவா் கைதுஅவிநாசியில் போதைக்குப் பயன்படுத்துவதற்காக வலி நிவாரணி மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கைதுPublished On :11 செப்டம்பர் 2026, 3:30 am ISTஅவிநாசியில் போதைக்குப் பயன்படுத்துவதற்காக வலி நிவாரணி மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவிநாசி மங்கலம் சாலை, காசிகவுண்டன்புதூா் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது காசிகவுண்டன்புதூரில் குடியிருக்கும் அவிநாசி பழங்கரை, குளத்துப்பாளையத்தைச் சோ்ந்த வேலுமணி மகன் ஜெயபிரகாஷ் (27) வலி நிவாரணி மாத்திரைகளைப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தீவிர வலியைத் தீா்க்கப் பயன்படுத்தும் ‘டாபென்டடால்’ எனும் மாத்திரை என்பதும், வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜெயபிரகாஷை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்த 30 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
