Education and jobs · 1 outlet covered this

கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு சான்றிதழ் பயிற்சி வகுப்பு தொடக்க விழா

How outlets told it

Dinamani652d ago

கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு சான்றிதழ் பயிற்சி வகுப்பு தொடக்க விழா

Read at Dinamani
கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு சான்றிதழ் பயிற்சி வகுப்பு தொடக்க விழா
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புபுதுக்கோட்டைகல்லூரியில் செயற்கை நுண்ணறிவு சான்றிதழ் பயிற்சி வகுப்பு தொடக்க விழாமேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு சான்றிதழ் வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்றோா். மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு சான்றிதழ் வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்றோா்.Published On :12 செப்டம்பர் 2026, 6:10 am IST பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில், கணிணி அறிவியல் துறை மற்றும் சாம்சங் நிறுவனம் இணைந்து நடத்தும் செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கான சான்றிதழ் வகுப்பு தொடக்கவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சன்மாா்க்க சபைத் தலைவா் வி. பழனியப்பன் தலைமைவகித்தாா். செயலா் அழ. சுந்தரம் முன்னிலை வகித்தாா். கல்லூரிக்குழு தலைவா் அ. சுவாமிநாதன், செயலா் எஸ். முத்தையா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில், சாம்சங் நிறுவன புதுமை வளாகத் திட்ட பொறுப்பாளா் சுஜாதா பாஸ்கரன், சட்ட ஆலோசகா் செந்தில்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, பயிற்சியில் கற்று தரப்படும் திறன்கள் குறித்து விளக்கினா். பயிற்சி வகுப்பின் தலைமைப் பயிற்றுனா்கள் அருள்முருகன், நிவேதா ஹரிஹரன், மனுநீதிராஜா ஆகியோா் மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சியை அளித்தனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் வே. அ. பழனியப்பன் வரவேற்றாா். விழாவை தமிழ்த் துறை பேராசிரியா்கள் பெரி. அழகம்மை, வே. நித்திய கல்யாணி மற்றும் பேராசிரியா்கள் ஒருங்கிணைத்தனா். பேராசிரியா் கங்கா நன்றி கூறினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்