1 outlet covered this

வங்கிக் கடன் வாங்குவோருக்கு நற்செய்தி... இனி சப்-ரிஜிஸ்டர் ஆபிஸ் போக வேண்டாம்... செப் 15ம் தேதி முதல் அமல்

How outlets told it

News18 Tamil6547h ago

வங்கிக் கடன் வாங்குவோருக்கு நற்செய்தி... இனி சப்-ரிஜிஸ்டர் ஆபிஸ் போக வேண்டாம்... செப் 15ம் தேதி முதல் அமல்

Read at News18 Tamil
வங்கிக் கடன் வாங்குவோருக்கு நற்செய்தி... இனி சப்-ரிஜிஸ்டர் ஆபிஸ் போக வேண்டாம்... செப் 15ம் தேதி முதல் அமல்
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Salanraj RLast Updated:Sep 12, 2026 5:31 PM IST15.09.2026 முதல் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கடன் பெறும் போது உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு மற்றும் இரசிது ஆவணங்கள் நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு முறை (Presenceless Registration) மூலம் பதிவு சய்வது கட்டாயமாக்கப்படுகிறது 1/6வங்கிகளில் கடன் வாங்கும்போது சொத்துப் பத்திரங்களை அடமானம் வைப்பதற்கும், கடனை முழுமையாக அடைத்த பிறகு அந்த அடமானத்தை ரத்து செய்வதற்கும் இனி பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. தமிழக அரசின் வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை வெளியிட்டுள்ள அரசாணை (G.O. Ms No. 129) மூலம், இத்தகைய ஆவணப் பதிவுகள் அனைத்தையும் ஆன்லைன் முறை மூலம் பதிவு செய்ய கட்டாயமாக்கியுள்ளது.2/6பொதுவாக ஒருவர் வங்கியில் கடன் பெறும்போது, தனது சொத்து ஆவணங்களைப் பிணையமாக வைப்பதற்கான 'உரிமை ஆவணங்கள் ஒப்படைப்புச் சான்று' (Deposit of Title Deeds) உருவாக்கப்படும். அதேபோல, கடனை முழுமையாக அடைத்த பிறகு அந்த அடமானப் பொறுப்பை ரத்து செய்வதற்கான 'கடன் அடைப்புச் சான்று' (Deed of Receipt) உருவாக்கப்படும்.3/6இந்த ஆவணங்களை அரசுப் பதிவேட்டில் கொண்டு வரவும், சொத்தின் வில்லங்கச் சான்றிதழில் ஏற்றவும் கடன் வாங்குபவரும், வங்கி அதிகாரியும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆவணங்களைச் சமர்ப்பித்துக் கையெழுத்திட வேண்டும். இதனால் சார்பதிவாளர் அலுவலகங்களில் தேவையற்ற கூட்ட நெரிசலும், மக்களுக்கு நேர விரயமும் ஏற்பட்டு வந்தன.4/6இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த 07.09.2026 அன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், 'நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு முறை மூலம் பதிவு செய்வது காட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார். இதனை செயல்படுத்தும் விதமாக, அத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.5/6இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல், சொத்துப் பத்திரத்தைப் பிணையமாக வைக்கும் உரிமை ஆவணங்கள் ஒப்படைப்புச் சான்று மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்திய பின் அடமானப் பொறுப்பை ரத்து செய்யும் கடன் அடைப்புச் சான்று ஆகிய இரண்டும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட ஆவண நகல்கள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையிலேயே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.6/6இதன் மூலம் போலி அடமான மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரே சொத்து பத்திரத்தை வைத்து  வெவ்வேறு வங்கிகளில் போலியாக அடமானக் கடன்கள் பெறும் மோசடிகள் இதன் மூலம் முற்றிலுமாகத் தடுக்கப்படும் என்றும் வங்கிகள் எவ்விதத் தாமதமும் இன்றி கடனை விரைவாக வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.