1 outlet covered this

தூத்துக்குடி: வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கிய 5 அடி நீள நல்ல பாம்பு மீட்பு

How outlets told it

Daily Thanthi992d ago

தூத்துக்குடி: வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கிய 5 அடி நீள நல்ல பாம்பு மீட்பு

Read at Daily Thanthi
தூத்துக்குடி: வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கிய 5 அடி நீள நல்ல பாம்பு மீட்பு
Photo: Daily Thanthi

Published on: 12 Sep 2026, 7:57 amதூத்துக்குடி, தூத்துக்குடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தண்ணீர் தொட்டியில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தண்ணீர் தொட்டிக்குள் சென்று பதுங்கிய நல்ல பாம்புதூத்துக்குடி மடத்தூர், கல்லூரி நகர் பகுதியில் வசித்து வருபவர் மங்கேஷ்பாபு. இவரது வீட்டின் வளாகத்திற்குள் திடீரெனப் புகுந்த நல்ல பாம்பு ஒன்று, அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வெளியேறி, சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நல்ல பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்புஇதையடுத்து சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், சிறப்பு நிலை அலுவலர் இசக்கிராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தவசி, ஜெயக்குமார், அஜித் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை சாதுரியமாக மீட்டு, பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சாதுரியமாக செயல்பட்டு பாம்பை மீட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி: வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கிய 5 அடி நீள நல்ல பாம்பு மீட்பு · Snashd