Business · 1 outlet covered this

வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 70% வரை மானியம்... அரசு வழங்கும் மாபெரும் சலுகை

How outlets told it

News18 Tamil654d ago

வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 70% வரை மானியம்... அரசு வழங்கும் மாபெரும் சலுகை

Read at News18 Tamil
வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 70% வரை மானியம்... அரசு வழங்கும் மாபெரும் சலுகை
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubeReported by:Pooja SPublished by:pradeepa mLast Updated:Sep 10, 2026 12:59 PM ISTதகுதியான விவசாயிகளுக்கு 40% முதல் 70% வரை மானியம் வழங்கப்பட உள்ளது.1/7விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2026-2027-ஆம் ஆண்டு வேளாண் பட்ஜெட் அறிவிப்பின்படி, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க 401 பயனாளிகளுக்கு ₹502.33 இலட்சம் நிதியுதவி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.2/7வழங்கப்படும் மானிய விவரங்கள்: ​ஆதிதிராவிடர் / பழங்குடியின சிறு, குறு விவசாயிகள்: 50% அடிப்படை மானியத்துடன் கூடுதல் 20% மாநில அரசு நிதி சேர்த்து, மொத்தம் 70% மானியம் வழங்கப்படும். ​இதர பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள்: 50% அடிப்படை மானியத்துடன் கூடுதல் 10% மாநில அரசு நிதி சேர்த்து (விசைக்களையெடுப்பான், நெல் நாற்று நடவு இயந்திரம், தட்டை வெட்டும் கருவி ஆகியவற்றிக்கு மட்டும்), மொத்தம் 60% மானியம் வழங்கப்படும்.3/7பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு/குறு மற்றும் பெண் விவசாயிகள்: அதிகபட்சமாக 50% மானியம் அல்லது அரசு நிர்ணயித்த தொகை (எது குறைவோ அது) வழங்கப்படும். ​இதர விவசாயிகள்: அதிகபட்சமாக 40% மானியம் அல்லது அரசு நிர்ணயித்த தொகை வழங்கப்படும்.4/7விண்ணப்பிக்கும் முறை மற்றும் காலம்: ​ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவுத்தளத்தில் (Agri Stack) பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ​ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7-ஆம் தேதி வரை அல்லது 15 முதல் 21-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.5/7தேவையான ஆவணங்கள்: சிட்டா, அடங்கல், சிறு/குறு விவசாயி சான்று, நில வரைபடம், அடையாளச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் மற்றும் சாதி சான்று. ​உழவன் செயலி (Uzhavan App) மூலமாக விவசாயிகள் ஒருமுறை நிரந்தரப் பதிவு (One-Time Registration) செய்து கொள்ள வேண்டும். ​பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து, ஒவ்வொரு மாதமும் 8-ஆம் தேதி கணினி வழி குலுக்கல் (System-generated Lottery) முறையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்6/7தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்: ​செயற்பொறியாளர் (வே. பொ) அலுவலகம்:27/1209, பெரியார் தெரு, வழுதரெட்டி, விழுப்புரம் - 605 403. தொலைபேசி: 04146 294888 ​உதவி செயற்பொறியாளர் (விழுப்புரம் கோட்டம்): 27/1209, பெரியார் தெரு, வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401. தொலைபேசி: 04146 2589517/7உதவி செயற்பொறியாளர் (திண்டிவனம் கோட்டம்): டான்வா நகர் குடியிருப்பு வளாகம், மரக்காணம் ரோடு, மானூர், திண்டிவனம் - 604 001. தொலைபேசி: 04147 294486 ​தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் பெற்றுப் பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.