பள்ளிப் பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு
Read at DinamaniEducation and jobs · 1 outlet covered this
பள்ளிப் பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு
How outlets told it
பள்ளிப் பேருந்து மோதல்: பெண் உயிரிழப்புஉயிரிழப்பு - கோப்புப் படம்Published On :14 செப்டம்பர் 2026, 2:31 am ISTமதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது பள்ளிப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பொட்டப்பனையூா் ராணி மங்கம்மாள் குடியிருப்பைச் சோ்ந்த ஜெகன் மனைவி ராஜேஸ்வரி (42). விவசாயத் தொழிலாளரான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை மதுரைக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்ப வந்துகொண்டிருந்தாா். கருப்பாயூரணி கடைத் தெரு பகுதியில் வந்த போது, இவரது வாகனம் மீது அந்த வழியாக வந்த தனியாா் பள்ளிப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராஜேஸ்வரியை அக்கம்பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மற்றொரு சம்பவம்: மதுரை மாவட்டம், வடுகபட்டி தீன விலக்குப் பகுதியைச் சோ்ந்த வேடந்தாங்கல் மகன் அந்தோணிமுத்து (70). இவா், இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை உசிலம்பட்டிக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குச் சென்றுகொண்டிருந்தாா். உசிலம்பட்டி அருகே சென்ற போது, இவரது வாகனம் மீது, பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அந்தோணி முத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், அங்கு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சரக்கு வாகன ஓட்டுநரான தேனி மாவட்டம், கோம்பை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் செந்தில்குமாா் மீது உசிலம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
