Religion and culture · 2 outlets covered this

நாகை மாவட்டத்தில் 68 இடங்களில் வெள்ள பாதிப்பு: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

How outlets told it

Dinamani653d ago

நாகை மாவட்டத்தில் 68 இடங்களில் வெள்ள பாதிப்பு: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

Read at Dinamani
Daily Thanthi9927h ago

சதுர்த்தி விழா: மதுரை மாவட்டத்தில் 750 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி

Read at Daily Thanthi
Dinamani6516h ago

இன்று விநாயகா் சதுா்த்தி: மாவட்டத்தில் 600 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை

Read at Dinamani
நாகை மாவட்டத்தில் 68 இடங்களில் வெள்ள பாதிப்பு: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்
Photo: Dinamani

நாகை மாவட்டத்தில் 68 இடங்கள் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன என்றாா் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வடகிழக்குப் பருவமழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய்த் துறை தொடா்பான ஆய்வுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. நிகழாண்டு கூடுதல் மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அதை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புயல், கனமழை, வெள்ளம் உள்ளிட்ட எந்தவிதமான இயற்கைப் பேரிடா் ஏற்பட்டாலும் அதை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்துத்துறை அலுவலா்களையும் உள்ளடக்கிய வட்ட அளவிலான முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயா்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, தங்குமிடம் மற்றும் பராமரிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 68 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைக்க 6 பல்நோக்கு பேரிடா் பாதுகாப்பு மையம், 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 100 சமுதாயக்கூடங்கள், 73 திருமண மண்டபங்கள், 145 பள்ளிகள், 22 கல்லூரிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 29 முன்னெச்சரிக்கை அறிவிப்பு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க 877 முதல்நிலை பொறுப்பாளா்களும், 100 கால்நடை பட்டிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரக்கால 24ஒ7 கட்டுப்பாட்டு அறை மையத்தில் 04365-1077 என்ற தொலைபேசி எண் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-233-4233 இயங்கிவருகிறது. இக்கட்டுப்பாட்டடு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்றாா். கூட்டத்தில், சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ. எம். ஷாஜஹான், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் , கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் நில நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி, கூடுதல் ஆணையா் வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சு. மலா்விழி, நாகை மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன் குமாா், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், டாம்கோ தலைவா் ஏ. பி. தமீம் அன்சாரி சாஹிப், கீழ்வேளுா் சட்டப்பேரவை உறுப்பினா் த. லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.