Crime and courts · 1 outlet covered this

கோவையில் பெண் ஆய்வாளரை வெட்டியவர் மீது துப்பாக்கிச் சூடு

How outlets told it

The Hindu Tamil6513h ago

கோவையில் பெண் ஆய்வாளரை வெட்டியவர் மீது துப்பாக்கிச் சூடு

Read at The Hindu Tamil
கோவையில் பெண் ஆய்வாளரை வெட்டியவர் மீது துப்பாக்கிச் சூடு
Photo: The Hindu Tamil

Updated on: 13 Sep 2026, 9:07 pm1 min readகோவை: கோவை​யில் பெண் காவல் ஆய்​வாளரை அரி​வாளால் வெட்​டியவரை போலீ​ஸார் துப்​பாக்​கிச் சூடு நடத்தி பிடித்தனர். கோவை மாநகரில் நேற்று முன்​தினம் இரவு 14 வயது சிறுமியை இருசக்கர வாக​னத்​தில் கடத்​திச் சென்று பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக போலீ​ஸாருக்கு புகார் வந்தது. இதன்பேரில் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலைய போலீ​ஸார் கஞ்​சிக்​கோணாம்​பாளை​யம் பகு​தி​யில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்​கொடுமை செய்ததாக சந் தோஷ், தவசி ஆகிய இருவரை​யும் போக்சோ வழக்​கில் போலீ​ஸார் கைது செய்​தனர். கைதான தவசி​யிடம் நடத்திய விசா​ரணை​யில், சிறுமியை மிரட்​டு​வதற்கு பயன்​படுத்​திய அரி​வாளை மறைத்து வைத்​திருக்​கும் இடத்தை அடை​யாளம் காட்​டு​வ​தாக தெரி​வித்​துள்​ளார். அதன்​பேரில், காவல் ஆய்​வாளர் சுவர்​ண​வள்ளி தலை​மையி​லான போலீ​ஸார் உடன் சென்​ற​னர். அப்​போது மறைத்து வைத்​திருந்த அரி​வாளை திடீரென எடுத்த தவசி, ஆய்​வாளர் சுவர்​ண​வள்​ளியை வெட்​டி​விட்டு அங்​கிருந்து தப்​பியோட முயன்​றார். இதனால் தற்​காப்புக்காக உதவி ஆய்​வாளர் சிலம்பரசன் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில், தவசி​யின் இடது காலில் குண்டு பாய்ந்தது. பின்​னர் அவர் கோவை அரசு மருத்​து​வ மனையில் சேர்க்​கப்​பட்​டார். காயமடைந்த காவல் ஆய்​வாளர் சுவர்​ண​வள்​ளி​யும் அதே மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு தீவிர சிகிச்​சை பெற்​று வரு​கி​றார்​.