Crime and courts · 1 outlet covered this

வீட்டில் தனியாக இருந்த வாலிபருக்கு நேர்ந்த கொடூரம் - அரிவாளால் வெட்டிக்கொலை!

How outlets told it

Daily Thanthi9921h ago

வீட்டில் தனியாக இருந்த வாலிபருக்கு நேர்ந்த கொடூரம் - அரிவாளால் வெட்டிக்கொலை!

Read at Daily Thanthi
வீட்டில் தனியாக இருந்த வாலிபருக்கு நேர்ந்த கொடூரம் - அரிவாளால் வெட்டிக்கொலை!
Photo: Daily Thanthi

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மான்வி நகரை சேர்ந்த வாலிபர் ஹனுமேஷ் (வயது 32). திருமணமாகாதவர். அவர் தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். இவர்கள் நெல் வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர். ஹனுமேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு நெல் வியாபாரத்திற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்ததார்.

வெட்டிக்கொலை

அப்போது அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஹனுமேஷை அரிவாளால், தலையில் வெட்டிக் கொன்றார். இதையடுத்து சங்கர் நேராக மான்வி போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். போலீசார் விசாரணையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஹனுமேஷ் மற்றும் கொலையாளி சங்கர் ஆகியோரின் வீடுகள் அருகருகே அமைந்துள்ளன. சங்கரின் சகோதரியுடன் ஹனுமேஷ் தகாத உறவில் இருப்பதாக சங்கர் சந்தேகித்தார்.

கைது

இதனால் சங்கர், ஹனுமேஷை கொலை செய்தது தெரியவந்தது. கொலையை செய்வதற்கு முன்பு சங்கர், அரிவாளைப் பிடித்தபடி இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியிருந்தார். இதையடுத்து - மான்வி போலீசார் சங்கரை கைது செய்தனர் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.