Crime and courts · 1 outlet covered this

பச்சிளம் குழந்தை கழுத்தறுத்து கொலை - தாய் செய்த கொடூரம்..!

How outlets told it

Daily Thanthi992d ago

பச்சிளம் குழந்தை கழுத்தறுத்து கொலை - தாய் செய்த கொடூரம்..!

Read at Daily Thanthi
பச்சிளம் குழந்தை கழுத்தறுத்து கொலை - தாய் செய்த கொடூரம்..!
Photo: Daily Thanthi

Published on: 11 Sep 2026, 12:25 pmதிருவனந்தபுரம்,18 மாதங்கள் ஆன பச்சிளம் குழந்தையை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த தாய். குழந்தை கழுத்தறுத்துக் கொலைகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மலையின் கீழ் பகுதியை சேர்ந்தவர் அபிஜித். இவருடைய மனைவி கிறிஸ்டி (வயது 29). இவர்களுக்கு இவான என்ற அன்னா எனும் 18 மாதங்களான பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் கிறிஸ்டி -ய்ய்ய்ய்ய்ய்குழந்தையை தூங்க வைப்பதற்காக படுக்கையறைக்கு அழைத்து சென்று, கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அபிஜித்தின் அத்தை கதவை தட்டியுள்ளார். அப்போது கதவைத் திறந்த கிறிஸ்டி, ”நான் குழந்தையை கொன்று விட்டேன்” என்று பயமில்லாமல் கூறியதாக தெரிகிறது. இதனால் உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, குழந்தையின் கழுத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே உறவினர்கள் குழந்தையை மீட்டு அருகிலுள்ள விளவூர்க்கல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து திருவனந்தபுரம் எஸ். ஏ. டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதிக ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், குழந்தையை கழுத்தறுத்து விட்டு தாயும் அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மலையின் கீழ் போலீசார், கிறிஸ்டியை கைது செய்தனர். தற்போது அவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.