Sports · 1 outlet covered this

அறிமுக டெஸ்டிலேயே அசத்தல்.. 9 சிக்சர்கள் விளாசிய பாகிஸ்தான் வீரர்!

How outlets told it

Polimer News1002d ago

அறிமுக டெஸ்டிலேயே அசத்தல்.. 9 சிக்சர்கள் விளாசிய பாகிஸ்தான் வீரர்!

Read at Polimer News
அறிமுக டெஸ்டிலேயே அசத்தல்.. 9 சிக்சர்கள் விளாசிய பாகிஸ்தான் வீரர்!
Photo: Polimer News

இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில், பாகிஸ்தான் வீரர் ரஸாவுல்லா அதிரடியாக விளையாடி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். பாகிஸ்தானின் 2-வது இன்னிங்ஸில் 9-வது வீரராக களமிறங்கிய 21 வயதான ரஸாவுல்லா, வெறும் 63 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 9 சிக்சர்கள் அடிப்பது வரலாற்றில் 2-வது முறையாகியுள்ளது. இதற்கு முன்பு 2008ஆம் ஆண்டு நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தி, தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 9 சிக்சர்கள் அடித்திருந்தார். அப்போட்டியில் 10-வது வீரராக களமிறங்கிய சவுத்தி, 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த இன்னிங்ஸிலும் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள் இடம்பெற்றிருந்தன. வேகப்பந்து வீச்சை அச்சமின்றி எதிர்கொண்ட ரஸாவுல்லாமுதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ரஸாவுல்லாவை, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன் மற்றும் ஜோஷ் டங் ஆகியோர் ஷார்ட் பிட்ச் பந்துகளால் சோதித்தனர். ஆனால் அதற்கு அஞ்சாமல் அதிரடியாக விளையாடிய ரஸாவுல்லா, கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி பாகிஸ்தானின் ஸ்கோரை உயர்த்தினார். தனது அதிரடி ஆட்டம் குறித்து பேசிய அவர், வேகப்பந்து வீச்சுக்கு தான் பயப்படவில்லை என்றும், ஷார்ட் பால் தனக்கு பிடித்தமான பந்து என்றும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு கிடைத்த நம்பிக்கைஇந்தத் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு, ரஸாவுல்லாவின் அதிரடி ஆட்டம் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட ரஸாவுல்லா, இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்டை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்திருந்தார். தனது ஆட்டம் குறித்து ரஸாவுல்லா கூறுகையில், நாட்டுக்காக விளையாடும்போது எதற்கும் பயப்படத் தேவையில்லை என்றும், ஆட்டத்தை ரசித்து விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகவும், 50 பந்துகளை எதிர்கொண்டால் நல்ல முடிவு கிடைக்கும் என நம்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.