Education and jobs · 1 outlet covered this

மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூடல்: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

How outlets told it

The Hindu Tamil657h ago

மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூடல்: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

Read at The Hindu Tamil
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூடல்: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
Photo: The Hindu Tamil

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் 252 மதரஸாக்​களை மூட உத்​தர​விட்​டுள்ள அரசு மேலும் 100 மதரஸாக்​களுக்கு விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பி உள்​ளது.

மேற்​கு​வங்க மாநிலத்​தில் இஸ்​லாமிய மதக் கல்வி மற்​றும் பொதுக்​கல்​வியை கற்​பிக்​கும் மதரஸாக்​கள் ஆயிரக்​கணக்​கில் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் பெரும்​பாலானவை முறை​யாக அனு​மதி பெறாமல் இயங்கி வரு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன.

இதனையடுத்​து, மேற்​கு​வங்​கம் முழு​வதும் உள்ள அங்​கீகரிக்​கப்​பட்ட மற்​றும் அங்​கீகரிக்​கப்​ப​டாத மதரஸாக்​களின் எண்​ணிக்​கையை தீர்​மானிப்​ப​தற்​காக, மாநிலம் தழு​விய கணக்​கெடுப்பு நடத்த முதல்​வர் சுவேந்து அதி​காரி கடந்த ஜூன் மாதம் உத்​தர​விட்​டார்.

அதனைத் தொடர்ந்​து, மதரஸா நிர்​வாக அமைப்​பு​கள், மாணவர் அமைப்​புச் சேர்க்​கை, நிதி ஆதா​ரங்​கள் மற்​றும் பதிவு நிலை ஆகிய​வற்றை ஆய்வு செய்​வதற்​காக, சிறு​பான்​மை​யினர் விவ​காரங்​கள் மற்​றும் மதரஸா கல்​வித் துறை​யால் மாநிலம் முழு​வதும் கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

இதுகுறித்து சிறு​பான்மை விவ​காரங்​கள் துறை அமைச்​சர் குதி​ராம் துடு கூறும்​போது, “கண்​டறியப்​பட்ட முடிவு​களின் அடிப்​படை​யில், முதல் கட்​ட​மாக 252 மதரஸாக்​களை மூட உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​பட்​டன. மேலும், கடுமை​யான முறை​கேடு​கள் கண்​டறியப்​பட்ட மற்ற 100 மதரஸாக்​களுக்கு விளக்​கம் கோரும் அறி​விப்​பு​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த கல்வி நிறு​வனங்​கள் ஆதா​ரம் அல்​லது முறை​யான அங்​கீ​காரத்தை வழங்​கத் தவறி​னால், அவற்றை மூடு​வதற்கு நடவடிக்கை எடுக்​கப்​படும். தற்​போது மேற்கு வங்​கத்​தில் 2,132 மதரஸாக்​கள் முறை​யான அனு​ம​தி​யுடன் இயங்கி வரு​கின்​றன, அதே நேரத்​தில் அனு​மதி பெறாத மதரஸாக்​களின் எண்​ணிக்கை 2,396 ஆக உள்​ளது” என்​றார்​.

இந்தியர்களில் 80% பேர் அசைவ உணவு உண்பவர்கள்: பிரிக்ஸ் உணவுப் பட்டியல் குறித்து ராகுல் விமர்சனம்