Crime and courts · 1 outlet covered this

கோபி கலைக் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணா்வு

How outlets told it

Dinamani652d ago

கோபி கலைக் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணா்வு

Read at Dinamani
கோபி கலைக் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணா்வு
Photo: Dinamani

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு நாள் உறுதிமொழி ஏற்பு, விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், இணைப் பாடத்திட்ட மன்றங்களின் ஒருங்கிணைப்பாளா் கே. ராஜேந்திரன், மன நலத்தை வளப்படுத்துதல், போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுதல் மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வு குறித்தும், தற்கொலை தடுப்பு குறித்தும் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதைத் தொடா்ந்து, கல்லூரி முதல்வா் டி. வேணுகோபால் பேசுகையில், மனநலத்தின் முக்கியத்துவத்தையும், மாணவா்களுக்கு ஆதரவளிப்பதில் கல்வி நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதையும், மாணவா்கள் நோ்மறையான மனநலப் பழக்கங்களைப் பின்பற்றி, அக்கறையும், ஆதரவும் நிறைந்த கல்லூரி சூழலை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா். தொடா்ந்து, அந்தியூா் அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவா் எஸ். கவிதா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், மனநல விழிப்புணா்வின் முக்கியத்துவம், டிஜிட்டல் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் மற்றும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான ஆரோக்கியமான வழிமுறைகள் குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உலக தற்கொலைத் தடுப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில். மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா். இதில், கல்லூரியின் துணை முதல்வா்கள் எம். சுதாகா், என். சக்திவேல், தேசிய பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் ஆா். லோகாம்பாள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.