எஸ்ஐஆர் பணி: சமந்தா, மகேஷ்பாபு, ராஜமவுலிக்கு நோட்டீஸ்
Read at The Hindu TamilCinema and entertainment · 1 outlet covered this
எஸ்ஐஆர் பணி: சமந்தா, மகேஷ்பாபு, ராஜமவுலிக்கு நோட்டீஸ்
How outlets told it

தெலங்கானாவில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் மற்றும் பெற்றோரின் பெயர்களில் உள்ள பிழைகள், பழைய வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களுக்கும் இப்போது இருப்பதற்குமான முரண்பாடுகளைத் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக, தெலுங்கு திரை பிரபலங்களான நடிகை சமந்தா, நடிகர்கள் மகேஷ்பாபு, வெங்கடேஷ், விஜய் தேவரகொண்டா, இயக்குநர் ராஜமவுலி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக் ஷ்மண், மகேஷ்பாபு மனைவி நம்ரதா, ராம்சரண் மனைவி உபாசனா உள்பட பலருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. “பிரபலங்கள் வர இயலாத பட்சத்தில் அவர்கள் சார்பாக யாரையாவது அனுப்பி ஆவணங்களைச் சமர்ப்பித்து திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35
