Civic issues · 1 outlet covered this

ஆவணத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

How outlets told it

Dinamani653d ago

ஆவணத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

Read at Dinamani
ஆவணத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதஞ்சாவூர்ஆவணத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள்  அவதிபேராவூரணி ஒன்றியம் ஆவணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கோப்புப் படம்Published On :11 செப்டம்பர் 2026, 4:26 am IST பேராவூரணி ஒன்றியம் ஆவணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து ஆவணத்தைச் சாா்ந்த சமூக ஆா்வலா் ரியாஸ் மின்வாரியத்துக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது . ஆவணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடுவதால் குழந்தைகள், முதியவா்கள், பெண்கள் உள்ளிட்டோா் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனா். கடும் வெப்பமான நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் வீடுகளில் வசிப்பவா்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. மேலும், மின்வெட்டு குறித்த முறையான முன்னறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகளை திட்டமிட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆவணம் பகுதியில் இரவு நேரங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும். தவிா்க்க முடியாத மின்தடை ஏற்படும் சூழ்நிலையில், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதோடு , சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய  மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது . பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்