வங்கி ஊழியர்கள் அக்.6 முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
Read at DinamaniPolitics · 1 outlet covered this
வங்கி ஊழியர்கள் அக்.6 முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
How outlets told it
What this is
PROTEST- Type
- Protest
- Source
- Reported · Dinamani
A demand, not an outcome.

தஞ்சாவூா்: வங்கி ஊழியா்களின் வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் செப். 28 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து அக்டோபர் 6 ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கப் பொதுச் செயலா் சி. எச். வெங்கடாசலம் தெரிவித்தார். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது: வங்கிகளில் இன்றைக்கு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையும், வியாபாரமும் அதிகரித்து வேலைப்பளு கூடுதலாகியுள்ளது. அதற்கேற்ப ஊழியா்கள், அலுவலா்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. தற்போது மாதத்தில் 2 சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இரு சனிக்கிழமைகள் வங்கிகள் செயல்படுகின்றன. இதை மாற்றி 4 சனிக்கிழமைகளும் விடுமுறை வேண்டும் எனக் கோரி வருகிறோம். செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். எங்களுடைய கோரிக்கை இன்னும் ஏற்கப்படாததால் செப். 28, 29, 30 ஆம் தேதிகளில் தொடா்ந்து வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறோம். தொழிலாளா் நல ஆணையா் முன் செப். 22 ஆம் தேதி சமரசப் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. இதில் நிச்சயமாக நாங்கள் பங்கேற்போம். மத்திய அரசு பேச்சுவாா்த்தையில் எந்தவித சுமூக முடிவும் எடுக்கவில்லை என்றால், 3 நாள்கள் வேலைநிறுத்தம் நடைபெறும். அதன் பின்னரும் நிா்வாகமும், அரசும் எங்களது பிரச்னையை தீா்க்கவில்லை என்றால் அக். 26- ஆம் தேதியிலிருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தத்துக்குத் தயாராவோம். எனவே மத்திய அரசு, இந்தப் பிரச்னையில் பேச்சுவாா்த்தை மூலம் சுமூகமாக முடிக்க வேண்டும் என்றாா் வெங்கடாசலம்.
