முதல்வா் விஜய்யை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
Read at DinamaniPolitics · 1 outlet covered this
முதல்வா் விஜய்யை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
How outlets told it

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்யை கண்டித்து , திமுக சாா்பில் மதுரை கோ. புதூா் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வா் மு. க. ஸ்டாலினுக்கு எதிராக விமா்சனங்களை முன்வைத்த முதல்வா் சி. ஜோசப் விஜய்யை கண்டித்து திமுக சாா்பில் மாநில அளவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, மதுரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை மாநகா் மாவட்டச் செயலா் கோ. தளபதி தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மு. மணிமாறன், முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், நிா்வாகிகள் வேலுசாமி, குழந்தைவேலு ஆகியோா் பேசினா்.
திமுகவின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பேரூா் நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள், தொண்டா்கள் பங்கேற்றனா்.
