Crime and courts · 1 outlet covered this

உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இளைஞா் கைது

How outlets told it

Dinamani652d ago

உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இளைஞா் கைது

Read at Dinamani
உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இளைஞா் கைது
Photo: Dinamani

உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இளைஞா் கைது கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பெருமாள் கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.Published On :12 செப்டம்பர் 2026, 6:55 am IST கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பெருமாள் கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். நெய்வேலி, வட்டம் 27-இல் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த மா்ம நபா் அங்கிருந்த 3 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த ரூ.35 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றாராம். இதுகுறித்து, நெய்வேலி வட்டம் 19 பகுதியில் வசிக்கும் கோயில் கணக்குப் பிள்ளை சிவசங்கா் (58) காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், உதவி ஆய்வாளா் ஜெரினா மற்றும் போலீஸாா் புதன்கிழமை நாககன்னி அம்மன் கோயில் அருகே ரோந்துப் பணியில் இருந்தனா். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்த அம்மன் ராஜ்(26) என்பவரைஅழைத்து விசாரணை நடத்தியதில், ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியதை ஒப்புக் கொண்டாராம். இதையடுத்து அம்மன் ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.