World · 1 outlet covered this

இஸ்ரேல் பிரதமர்களின் சிகை அலங்காரத்திற்கு மட்டும், இத்தனை கோடிகள் செலவாகிறதா?

How outlets told it

News18 Tamil6533h ago

இஸ்ரேல் பிரதமர்களின் சிகை அலங்காரத்திற்கு மட்டும், இத்தனை கோடிகள் செலவாகிறதா?

Read at News18 Tamil
இஸ்ரேல் பிரதமர்களின் சிகை அலங்காரத்திற்கு மட்டும், இத்தனை கோடிகள் செலவாகிறதா?
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeஇஸ்ரேல் பிரதமர்களின் சிகை அலங்காரத்திற்கு மட்டும், இத்தனை கோடிகள் செலவாகிறதா?Published by:Nivetha Jnews18-tamilLast Updated:Sep 13, 2026 7:01 AM ISTஇஸ்ரேல் - காசா போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், தலைமுடியை சரிசெய்ய 22 லட்சமும், மேக்கப் செய்ய 13 லட்சமும் அரசு பணத்தில் இருந்து செலவிட்டுள்ளாராம் நெதன்யாகு!1/6கடந்த 7 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர்களின் சிகை அலங்காரம், மேக்கப் ஆகியவற்றிற்காக சுமார் நான்கரை கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.2/6தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் யாரா விங்க்லர் ஷாலிட் என்பவர் கோரிய தகவல்களை ’அரசு பாதுகாப்பு’ என்ற காரணம் காட்டி பிரதமர் அலுவலகம் தர மறுத்துவந்தது.3/6ஆனால், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் அந்த தகவல்களை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வழங்கியுள்ளது. அதில், பிரதமர்களின் சிகை அலங்காரம், மேக்கப் ஆகியவற்றிற்காக கடந்த 7 ஆண்டுகளில் நான்கரை கோடி ரூபாய் செலவிட்டதாகவும், மொத்த செலவில் 90 சதவீதம் தற்போதைய பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவுக்கு செலவானதாகவும் கூறியுள்ளது.4/6குறிப்பாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நெதன்யாகு அமெரிக்கா சென்றிருந்தபோது, ஒரு முறை சிகை அலங்காரம், மேக்கப் செய்ய 13 லட்சம் ரூபாய் செலவிட்டதாகத் தெரிவித்துள்ளது.5/6இஸ்ரேல் - காசா போர் உச்சத்தில் இருந்த 2023 செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நெதன்யாகு தலைமுடியை சரிசெய்ய 22 லட்சமும், மேக்கப் செய்ய 13 லட்சமும் அரசு பணத்தில் இருந்து செலவிட்டுள்ளார்.6/6அதிகபட்சமாக 2023ஆம் ஆண்டு சுமார் 98 லட்சம் ரூபாயும், 2025ஆம் ஆண்டு காலத்தில் ஒரு கோடியே 6 ஆயிரம் ரூபாயும் அரசு செலவிட்டுள்ளது. இது முன்னாள் பிரதமர்களான நஃப்தாலி பென்னட் மற்றும் யாயிர் லாபிட் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் ஆண்டுக்கு 23 லட்சம் ரூபாயாக இருந்தது.