1 outlet covered this

ராகுலை பிரதமராக்க விஜய் பிரசாரம் செய்வார்! 40-க்கு 40 வெல்வோம்! மாணிக்கம் தாகூர்

How outlets told it

Dinamani653d ago

ராகுலை பிரதமராக்க விஜய் பிரசாரம் செய்வார்! 40-க்கு 40 வெல்வோம்! மாணிக்கம் தாகூர்

Read at Dinamani
ராகுலை பிரதமராக்க விஜய் பிரசாரம் செய்வார்! 40-க்கு 40 வெல்வோம்! மாணிக்கம் தாகூர்
Photo: Dinamani

ராகுல் காந்தியைப் பிரதமராக்க முதல்வர் ஜோசப் விஜய் பிரசாரம் செய்வார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மாணிக்கம் தாகூர் இன்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:”முதல்வர் விஜய், தவெகவினர், காங்கிரஸினர் என அனைவரும் தெளிவாக இருக்கிறோம். தமிழ்நாடு காங்கிரஸைப் பொறுத்தவரை ராகுல் காந்திதான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர். அதனை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். அதற்கான காலம் வரும்போது அனைவரும் வெளிப்படையாக அறிவிப்பார்கள். தேசிய அளவில் இந்தியா கூட்டணியாகவும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியாகவும் செயல்படுவோம். இது மாநிலத்துக்கான கூட்டணி. தமிழ்நாடு மற்றும் புதுவையில் இந்த கூட்டணிக்கான தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் தொடர வேண்டும். இந்த கூட்டணியில் உள்ள அனைத்து எம். பி. க்களும் இந்தியா கூட்டணியின் உறுப்பினர்களாக உள்ளனர். 2029 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ராகுல் தலைமையிலான இந்தியா கூட்டணி பெறும். தமிழ்நாட்டில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் வெல்லும். ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் முதல்வர் விஜய் பிரசாரம் செய்வார். அவரின் பிரசாரத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை” எனத் தெரிவித்தார்.