Politics · 1 outlet covered this

தமிழ்நாடு முழுவதும் நேற்றிரவு எங்கும் மின்தடையில்லை: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார்

How outlets told it

Daily Thanthi9926h ago

தமிழ்நாடு முழுவதும் நேற்றிரவு எங்கும் மின்தடையில்லை: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார்

Read at Daily Thanthi
தமிழ்நாடு முழுவதும் நேற்றிரவு எங்கும் மின்தடையில்லை: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார்
Photo: Daily Thanthi

சென்னை,

மாநிலம் முழுவதும் தற்போது சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் சீரான மற்றும் தடையற்றமின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு மின் தடை(unplanned outage ) ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது மின்வாரியம்.

தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சாரவிநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறுஉடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும்தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையைதொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியதலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையானநடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன்வழங்கி வருகிறது.

மேலும், களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மின்சாரத் துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணிநேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவைமையத்தை 94987 94987 என்ற எண்ணில்தொடர்புகொள்ளுமாறு மின் நுகர்வோர்கள் மற்றும்பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.