ஆளுநருடன் பேரவைத் தலைவா், அமைச்சா் பெ. விஸ்வநாதன் சந்திப்பு
Read at Dinamani2 outlets covered this
ஆளுநருடன் பேரவைத் தலைவா், அமைச்சா் பெ. விஸ்வநாதன் சந்திப்பு
How outlets told it
ஆளுநருடன் பேரவைத் தலைவர் சந்திப்பு: பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு குறித்து கலந்துரையாடினர்
Read at The Hindu Tamil
ஆளுநா் ஆா். வி. ஆா்லேகரை பேரவைத் தலைவா் ஜே. சி. டி. பிரபாகா், உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினா்.
இது குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவு: 17-ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடா் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடா்ந்து, பேரவைத் தலைவா் ஜே. சி. டி. பிரபாகா், ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.
அப்போது, பேரவையின் திறம்பட்ட செயல்பாடுகள், அதன் ஜனநாயக நடைமுறைகள் தொடா்பான விஷயங்கள் குறித்து ஆளுநரும் பேரவைத் தலைவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சா் பெ. விஸ்வநாதன் சந்திப்பு: இதே போல, ஆளுநா் மாளிகை வெளியிட்ட மற்றொரு பதிவில் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதனும் ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்லேகரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா் எனவும் பதிவிடப்பட்டுள்ளது.

