Crime and courts · 1 outlet covered this

தேர்தலில் வென்று குறுகிய காலத்தில் பதவியை ராஜினாமா செய்பவர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க சட்டம் கோரி வழக்கு

How outlets told it

The Hindu Tamil6539h ago

தேர்தலில் வென்று குறுகிய காலத்தில் பதவியை ராஜினாமா செய்பவர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க சட்டம் கோரி வழக்கு

Read at The Hindu Tamil
தேர்தலில் வென்று குறுகிய காலத்தில் பதவியை ராஜினாமா செய்பவர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க சட்டம் கோரி வழக்கு
Photo: The Hindu Tamil

Updated on: 12 Sep 2026, 6:58 pm2 min readசென்னை: தேர்​தலில் வெற்​றி​பெற்று குறுகிய காலத்​தில் பதவியை ராஜி​னாமா செய்​பவர்​கள் தேர்​தலில் மீண்​டும் போட்​டி​யிட தடை விதிக்​கும் வகை​யில் சட்​டம் கொண்​டு​வரக் கோரி​யும், மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்​தேர்​தலுக்கு தடை விதிக்​கக் கோரி​யும், உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக சென்னை சைதாப்​பேட்​டையைச் சேர்ந்த வழக்​கறிஞர் கே. சுதன், உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள பொதுநல மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமி​ழ​கத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற முதல்​வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற மது​ராந்​தகம் மரகதம் குமர​வேல், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, கரூர் எம்​. ஆர்​.​விஜய​பாஸ்​கர், விராலிமலை சி.​விஜய​பாஸ்​கர், அம்​பாச​முத்​திரம் இசக்​கி சுப்​பை​யா, பெருந்​துறை எஸ்​. ஜெயக்​கு​மார் ஆகி​யோ​ரும் தங்​களது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு அன்​றைய தினமே தவெக​வில் ஐக்​கிய​மாகினர். இந்​நிலை​யில், தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இல்​லாத மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தனித்​ தொகு​தி​களுக்கு மட்​டும் இடைத்​தேர்​தலை அறி​வித்து தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. எஞ்​சிய 5 தொகு​தி​களுக்​கு இடைத்​தேர்​தலுக்​கான அறி​விப்பை வெளி​யிடக்​கூ​டாது என உயர் நீதி​மன்​றம் ஏற்​கெனவே விதித்த தடை செப்​.28 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கிடையே, மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் ஏற்​கெனவே அதி​முக எம்​எல்​ஏக்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மரகதம் குமர​வேல், சத்​தி​ய​பாமா ஆகிய இரு​வ​ரும் தற்​போது தவெக வேட்​பாளர்​களாக இடைத்​தேர்​தலில் போட்​டி​யிட​ உள்​ளனர். இது தேர்​தல் மீது மக்​கள் வைத்​திருக்​கும் நம்​பிக்​கை​யைச் சீர்​குலைத்து ஜனநாயகத்தை கேலிக்​கூத்​தாக்​கு​வது​போல உள்​ளது. இதனால் மக்​களின் வரிப்​பண​மும் தேர்​தல் செலவு என்ற பெயரில் வீணடிக்​கப்​பட்டு வரு​கிறது. எனவே, எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு மீண்​டும் போட்​டி​யிடு​பவர்​கள் வேட்​புமனு தாக்​கல் செய்​யும்​போது அந்த தேர்​தலுக்​கான செலவை அவர்​களே ஏற்​றுக்​கொள்​ளும் வகை​யில் அவர்​களை பொறுப்​பாக்​கி, தேர்​தல் செல​வுத் தொகையை டெபாசிட் செய்ய உரிய நடை​முறை​களை வகுக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும். மேலும், தேர்​தல் முடிவு​கள் வெளி​யான குறுகிய காலத்​தில் மக்​கள் தீர்ப்பை புறக்​கணித்து தங்​களது அரசி​யல் ​லாபத்​துக்​காக எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தால், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் குறிப்​பிட்ட காலத்​துக்கு இடைத்​தேர்​தலில் மீண்​டும் போட்​டி​யிட முடி​யாத​படி தடை விதிக்​கும் வகை​யில் சட்​டம் கொண்​டுவர தேர்​தல் ஆணை​யத்​துக்கு அறி​வுறுத்த வேண்​டும். இந்த வழக்கு முடிவுக்கு வரும்​ வரை மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களுக்கு இடைத்​தேர்​தல் நடத்த தடை விதிக்க வேண்​டும். இந்த தொகு​தி​களுக்கு தவெக வேட்​பாளர்​களாக அறிவிக்​கப்​பட்​டுள்ள முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் மரகதம் குமர​வேல், சத்​தி​ய​பாமா ஆகி​யோரது வேட்பு மனுக்​களை ஏற்​கக்​கூ​டாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும். அதே​போல, திருச்சி கிழக்​கு, கரூர், விராலிமலை, பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம், மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 7 தொகு​தி​களுக்​கும் இடைத்​தேர்​தல் நடத்த ஆகும் செல​வுத் தொகையை அறிக்​கை​யாக தாக்​கல் செய்ய தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​​வாறு அதில் கோரி​யுள்​ளார். இந்த வழக்கு விரை​வில் விசா​ரணைக்கு வரவுள்​ளது.