Sports · 2 outlets covered this

நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்த கேமரூன் கிரீன்!

How outlets told it

Dinamani6525h ago

நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்த கேமரூன் கிரீன்!

Read at Dinamani
Daily Thanthi9924h ago

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

Read at Daily Thanthi
நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்த கேமரூன் கிரீன்!
Photo: Dinamani

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீன் ( 27 வயது) தனது நீண்ட நாள் காதலியான எமிலி ரெட்வுட்டை திருமணம் செய்தார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் பிறந்த கேமரூன் கிரீன் ஆல் ரவுண்டராக ஆஸி. அணியில் விளையாடி வருகிறார். ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து போட்டிகளிலும் விளையாடி வரும் வீரராக இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 28 டி20, 39 டெஸ்ட், 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 638, 1920, 946 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல பந்துவீச்சில் முறையே 14, 39, 21 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு விளையாடும் கேமரூன் கிரீன் தனது காதலி எமிலி ரெட்வுட்டை (26 வயது) கடந்த பிப்.2025ல் நிச்சயதார்த்தம் செய்தார். சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு திருமணம் செய்துள்ளார்.

இவர்களுடைய திருமணம் கடந்த செப்.4ஆம் தேதியே முடிவடைந்ததாக தனது இன்ஸ்டா பக்கத்தில் கிரீன் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக இருவரும் பழகி வருவது குறிப்பிடத்தக்கது.

எமிலி ரெட்வுட் வெண்ணிற நீண்ட அங்கியையும், கேமரூன் கிரீன் கறுப்பு நிற கோட் சூட்டையும் அணிந்துள்ளார்கள். நடனமாடும் புகைப்படத்தையும் இதில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

இந்தப் பதிவுக்கு மேக்ஸ்வெல்லின் மனைவியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வினி ராமன் வாழ்த்துகள் கூறியுள்ளார். ஆரோன் ஹார்டி, கவாஜா என பல கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

க்ரீன் மனைவு எமிலி பிஎச்டி முடித்துள்ளார். உணவு நிபுணராகவும் பணியாற்றி வருகிறார். அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கிரீன் விளையாட தேர்வாகியுள்ளார்.

View this post on Instagram

ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி முதலிடம் பிடித்த ஜோ ரூட்! Aussie Cameron Green and his long time partner Emily Redwood tie the knot