இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே ஓட்டுநர் உரிமம், RC சான்றிதழ்..
Read at Polimer NewsEducation and jobs · 1 outlet covered this
இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே ஓட்டுநர் உரிமம், RC சான்றிதழ்..
How outlets told it

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம், RC எனப்படும் வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்றவை இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், வரும் 15ஆம் தேதி முதல், விண்ணப்பப் பதிவு அல்லது ஓட்டுநர் தேர்வு முடிந்த நாளிலேயே பொதுமக்கள் தங்களுக்கான சான்றிதழ்களை டிஜிட்டலாக டவுன்லோடு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதிக்குப் பிறகு தபாலில் அனுப்பும் முறை முற்றிலும் நிறுத்தப்படும் என்றும், ஒரு வருடத்துக்கு சான்றிதழ்களை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றும், அதன்பிறகு விதிமுறைகள்படி கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
