Politics · 1 outlet covered this

அமைச்சர்கள் தலைமையில் த.வெ.க., தேர்தல் பணிக்குழு; முதல்வர் விஜய் அறிவிப்பு

How outlets told it

Dinamalar6543h ago

அமைச்சர்கள் தலைமையில் த.வெ.க., தேர்தல் பணிக்குழு; முதல்வர் விஜய் அறிவிப்பு

Read at Dinamalar
அமைச்சர்கள் தலைமையில் த.வெ.க., தேர்தல் பணிக்குழு; முதல்வர் விஜய் அறிவிப்பு
Photo: Dinamalar

/செய்திகள்/தமிழகம்/ அமைச்சர்கள் தலைமையில் த. வெ. க., தேர்தல் பணிக்குழு; முதல்வர் விஜய் அறிவிப்புADDED : செப் 12, 2026 08:41 PM ADDED : செப் 12, 2026 08:41 PM அ நிறம் | அளவுசென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்லுக்கு, த. வெ. க., சார்பில் தேர்தல் பணிக்குழுவை, அக்கட்சி தலைவரும் முதல்வருமான விஜய் நியமித்துள்ளார். இரு தொகுதிகளுக்கும் தேர்தல் கண்காணிப் பாளர்களாக அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்குழுவில், மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத் ஆகியோரும், துணை பொறுப்பாளர்களாக எம். எல். ஏ., க்கள் சரவணமூர்த்தி, தியாகராஜன், விஜயராஜ், காமராஜ், த. வெ. க., செங்கல்பட்டு மாவட்ட செயலர் பாலாஜி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் தொகுதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் விஜய் பாலாஜி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரும், துணை பொறுப்பாளர்களாக எம். எல். ஏ., க்கள் பாலமுருகன், சத்யபாமா, ராம்குமார், திலீப், சத்யா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.