Politics · 1 outlet covered this

லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?

How outlets told it

Dinamani652d ago

லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?

Read at Dinamani
லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?
Photo: Dinamani

தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈா்ப்பதற்காக, லண்டன் சென்றிருக்கும் முதல்வா் ஜோசப் விஜய், அங்குள்ள மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தி ஷர்ட் என்ற நட்சத்திர விடுதியில் முதல்வர் விஜய் தங்குவதற்கு அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இது லண்டன் நகரில் உள்ள மிக உயரமாக நட்சத்திர விடுதி என்ற பெருமையோடு, ஐரோப்பாவிலேயே மிக உயரமான கட்டங்களின் வரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கிறதாம். இந்தக் கட்டத்திலிருந்து பார்த்தால் ஒட்டுமொத்த லண்டன் நகரும் தெரியுமாம். அவ்வளவு ஏன், லண்டன் வழியாகச் செல்லும் விமானங்களிலிருந்து பார்த்தாலும் இந்த நட்சத்திர விடுதியை பார்க்க முடியுமாம். இந்த விடுதி மிகப்பெரிய உணவகங்கள், திருமணக் கூடங்கள், தனியார் முன்பதிவு உணவகங்கள், நிறுவனக் கூட்டங்களுக்கான அரங்குகள் என பலவற்றைக் கொண்டிருக்கிறதாம். இங்குள்ள மிக உயரமான இடத்தில் அமர்ந்து, உலகை ரசித்தபடியே உணவருந்தும் உணவகமும் மிக உயரத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தையும் கொண்டு புகழ்பெற்றுள்ளது. திரையரங்கமும் இடம் பெற்றுள்ளதாம். இங்குள்ள அறைகளின் ஒருநாள் வாடகை இந்திய மதிப்பில் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் மற்றும் இதர கட்டணங்கள் என்று இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய கட்டடம் 52 தளங்களைக் கொண்டது. இந்த தி ஷர்ட் விடுதி 34 தளங்களைக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இதுவாகும். 6 நாள்கள் தங்கியிருக்கும் அவா் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக தொழிலதிபா்களுடன் ஆலோசனையும், புகழ்பெற்ற காா் பந்தய மைதானமான ‘சில்வா்ஸ்டோன் மோட்டாா் ரேசிங் சா்க்யூட்’-ஐயும் பாா்வையிடவுள்ளாா். இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டாா் ஸ்போா்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடா்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும் என்று கூறப்பட்டுள்ளது.