முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகம்: ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு
Read at Daily Thanthi1 outlet covered this
முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகம்: ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு
How outlets told it

நாமக்கல், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தி கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.70 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து ஜூலை மாதம் 23-ந்தேதி முட்டை விலை ரூ.6.80 ஆக இருந்தது. இது முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். இந்த நிலையில், முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த மாதம் 21-ந் தேதி ரூ.5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.16 நாட்களுக்கு பிறகு கடந்த 6-ந் தேதி முட்டை விலை 5 காசுகள் உயர்ந் தது. தொடர்ந்து 7, 8, 9-ந் தேதிகளில் தினமும் 5 காசுகள் உயர்ந்த நிலையில், நேற்று 10 காசுகள் மேலும் உயர்ந்து முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
