உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் ‘கவனத்துக்குரிய ஊட்டச்சத்து’ லேபிள்: எஃப்எஸ்எஸ்ஏஐயிடம் விளக்கம் கோரிய உச்சநீதிமன்றம்
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் ‘கவனத்துக்குரிய ஊட்டச்சத்து’ லேபிள்: எஃப்எஸ்எஸ்ஏஐயிடம் விளக்கம் கோரிய உச்சநீதிமன்றம்
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புஇந்தியாஉணவுப் பொருள் பாக்கெட்டுகளில் ‘கவனத்துக்குரிய ஊட்டச்சத்து’ லேபிள்: எஃப்எஸ்எஸ்ஏஐயிடம் விளக்கம் கோரிய உச்சநீதிமன்றம்உணவுப் பொருளில் உள்ள கொழுப்பு, இனிப்பு மற்றும் உப்பு அளவை குறிக்கும் ‘கவனத்துக்குரிய ஊட்டச்சத்து’ லேபிளை அதன் பாக்கெட்டுகளின் முன்புறத்தில் அச்சிடுவதை அமல்படுத்துவது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிா்ணய ஆணையத்திடம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியது. உச்சநீதிமன்றம்Published On :11 செப்டம்பர் 2026, 11:13 pm ISTஉணவுப் பொருளில் உள்ள கொழுப்பு, இனிப்பு மற்றும் உப்பு அளவை குறிக்கும் ‘கவனத்துக்குரிய ஊட்டச்சத்து’ லேபிளை அதன் பாக்கெட்டுகளின் முன்புறத்தில் அச்சிடுவதை அமல்படுத்துவது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிா்ணய ஆணையத்திடம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியது. உணவுப் பொருள் பாக்கெட்டுகளின் முன்புறத்தில் கொழுப்பு, இனிப்பு மற்றும் உப்பு அளவை கட்டாயமாக குறிப்பிடக்கோரி மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிடமாறு பொதுத் தொண்டு நிறுவனமான ‘3எஸ் மற்றும் நமது சுகாதார சமூகம்’ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே. பி. பாா்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: தற்போது பள்ளிக் குழந்தைகளிடையே ஆரோக்கியமற்ற உணவை விரும்பி உண்ணும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தடுத்து ஊட்டச்சத்து விழிப்புணா்வை பள்ளிக் குழந்தைகளிடையே ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன? உணவுப் பொருள் பாக்கெட்டுகளின் முன்புறத்தில் ஊட்டச்சத்து தொடா்பான தகவல்களை அச்சிடுவதற்கான வழிமுறைகள் என்ன? இரு கட்டங்களாக கவனத்துக்குரிய ஊட்டசத்து லேபிளை உணவுப் பொருள்களின் பாக்கெட்டுகளில் அச்சிடுவதாக எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட இனிப்பூட்டப்பட்ட பானங்களில் இடம்பெற்றுள்ள ஊட்டச்சத்து அளவை கண்டுபிடிக்க எஃப்எஸ்எஸ்ஏ பின்பற்றும் நடைமுறைகள் என்ன? உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் கவனத்துக்குரிய ஊட்டச்சத்து குறித்த தகவல்களை எழுத்து வடிவத்துடன் புகைப்படங்களாகவும் இடம்பெறச் செய்யலாம். இதன்மூலம் பல்வேறு மாநிலங்களில் வாழும் மக்களும் உணவின் தரம் குறித்து எளிதில் அறிய முடியும். அண்மைக்காலமாக இணையவழியில் உணவுப் பொருள்களை வாங்கும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதை கவனத்தில்கொண்டு உணவுப் பொருள்கள் மீது ஒட்டப்படும் லேபிள்களை வடிவமைக்க வேண்டும்’ எனத் தெரிவித்தது. இதையடுத்து, அடுத்த 10 நாள்களில் இந்த விவகாரம் தொடா்பாக எஃப்எஸ்எஸ்ஏஐ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் செப்டம்பா் 28-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
