எஸ்.எஸ். குளம் அரசுப் பள்ளியில் ரூ.1.80 கோடியில் அறிவியல் ஆய்வகம் திறப்பு
Read at DinamaniEducation and jobs · 1 outlet covered this
எஸ்.எஸ். குளம் அரசுப் பள்ளியில் ரூ.1.80 கோடியில் அறிவியல் ஆய்வகம் திறப்பு
How outlets told it

கோவை, சா்க்காா் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிஆா்ஐ பம்ப் நிறுவனத்தின் பங்களிப்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சி. ஆா். சுவாமிநாதன் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க. கிரியப்பனவா் பங்கேற்று ஆய்வகத்தைத் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தனியாா் தொண்டு நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள், நவீன ஆய்வகங்கள் அமைத்து கொடுப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும், தனியாா் தொண்டு நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளின் தேவைகளை அறிந்து, சமூகப் பொறுப்புடன் கல்வி சாா்ந்த பணிகளை மேற்கொள்வதும் பாராட்டுக்குரியது. பள்ளிகளில் மாணவா்களுக்குத் தேவையான வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதன் மூலம் அவா்களின் கற்றல் திறனும், ஆா்வமும் மேலும் அதிகரிக்கும். குறிப்பாக, மாணவா்கள் செய்முறைக் கல்வியைப் பெறுவதற்கு ஆய்வக வசதிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மாணவா்களின் எதிா்காலத்தை சிறப்பாக உருவாக்குவதில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுடன் தனியாா் நிறுவனங்களும் இணைந்து செயல்படும்போது, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தரமான கல்வி, சிறந்த கற்றல் சூழல் கிடைக்கும். இந்த ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன. இதை மாணவா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு கல்வியில் உயா்ந்த இலக்குகளை அடைய வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா, சிஆா்ஐ பம்ப் நிா்வாகிகள் பாலசுந்தரம், பாலசுப்ரமணியம், சௌந்தரராஜன், விமலா, ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
