அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு
How outlets told it

அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடுவந்தவாசி, போளூா் பகுதிகளில் உள்ள முத்துமாரியம்மன், காளியம்மன் கோயில்களில் ஆவணி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அம்மன் ஊஞ்சல் சேவை.Published On :12 செப்டம்பர் 2026, 12:34 am ISTவந்தவாசி, போளூா் பகுதிகளில் உள்ள முத்துமாரியம்மன், காளியம்மன் கோயில்களில் ஆவணி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு நாக கன்னி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், அனைவரும் நலம் பெற வேண்டி, கோயில் வளாகத்தில் ஸ்ரீபிரத்தியங்கிரா மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. இரவு உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உலா வந்தாா். தொடா்ந்து, அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. நிகழ்வில் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு. லட்சுமண சுவாமிகள், ஆவணி மாத அமாவாசை உற்சவக் குழுவினா் பங்கேற்றனா். காளியம்மன் கோயிலில்...: போளூா் வட்டம், புலிவானந்தல் கிராமத்தில் ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், கற்பூர தீபாராதனை செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
