Civic issues · 1 outlet covered this

மானாமதுரை - தாம்பரம் இடையே நாளை மெமு சிறப்பு ரயில்!

How outlets told it

Dinamani6536h ago

மானாமதுரை - தாம்பரம் இடையே நாளை மெமு சிறப்பு ரயில்!

Read at Dinamani
மானாமதுரை - தாம்பரம் இடையே நாளை மெமு சிறப்பு ரயில்!
Photo: Dinamani

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மானாமதுரையில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு திங்கள்கிழமை (செப்.14) முன்பதிவில்லாத ஒரு வழி மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து திங்கள்கிழமை (செப்.14) பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் மெமு சிறப்பு ரயில் அன்று இரவு 11.55 மணிக்கு தாம்பரம் நிலையத்தை வந்தடையும். அந்த ரயிலிலில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

முன்பதிவு இல்லாத ஒருவழி மெமு சிறப்பு ரயில் திருப்புவனம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சந்திப்பு, அம்பாத்துறை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MEMU special train between Manamadurai and Tambaram tomorrow