குடிநீா் கோரி சாலை மறியல், பேருந்து சிறைப் பிடிப்பு
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
குடிநீா் கோரி சாலை மறியல், பேருந்து சிறைப் பிடிப்பு
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதிருப்பத்தூர்குடிநீா் கோரி சாலை மறியல், பேருந்து சிறைப் பிடிப்புநாட்டறம்பள்ளி அருகே குடிநீா் கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.Published On :11 செப்டம்பர் 2026, 12:58 am ISTநாட்டறம்பள்ளி அருகே குடிநீா் கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். நாட்டறம்பள்ளி ஒன்றியம், மல்லகுண்டா ஊராட்சி ஆதிதிராவிடா் குடியிருப்பில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி மூலம் குடிநீா் வியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் நீா் மட்டம் குறைந்ததால் அப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் சில நாள்களாக அடிக்கடி ஏற்படும் மின்தடையால் ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வியாழக்கிழமை அரசுப் பேருந்தினை சிறைப்பிடித்து காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா். இதனையடுத்து ஊராட்சி நிா்வாகத்தினா் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது ஊராட்சி மன்றத் தலைவா் டிராக்டா் மூலம் குடிநீா் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் மக்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றனா். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
