Weather and environment · 1 outlet covered this

அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடக்கு இந்தியப் பெருங்கடலில் 3 புயல்கள் ; பேரழிவை ஏற்படுத்தும் என இஸ்ரோ அறிவிப்பு

How outlets told it

Daily Thanthi9938h ago

அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடக்கு இந்தியப் பெருங்கடலில் 3 புயல்கள் ; பேரழிவை ஏற்படுத்தும் என இஸ்ரோ அறிவிப்பு

Read at Daily Thanthi
அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடக்கு இந்தியப் பெருங்கடலில் 3 புயல்கள் ; பேரழிவை ஏற்படுத்தும் என இஸ்ரோ அறிவிப்பு
Photo: Daily Thanthi

சென்னை,

வடக்கு இந்திய பெருங்கடலில் வருகிற அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 கடுமையான புயல்கள் உருவாகி பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

3 தீவிர புயல்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ). கடற்பகுதிகளில் தீவிர வானிலை மாற்றம் குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் டிசம்பர் வரை அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் கடுமையான தாக் கத்தை ஏற்படுத்தக்கூடிய புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த காலகட்டத்தில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3 தீவிர புயல் உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

இந்த முறை உருவாகும் புயல்களின் வேகம் கடந்த 44 ஆண்டுகளில் காணப்பட்ட இயல்பான சராசரியை விட 'ஆற்றல் விரயக்குறியீடு' படி 13.06 மில்லியன் நாட்ஸ் அளவை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 7.15 மில்லியன் நாட்ஸ் என்ற வரலாற்று சராசரி அளவை விட 83 சதவீதம் அதிகமாகும்.

ஒடிசா, வடக்கு ஆந்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற கட லோரப் பகுதிகள், கடும் காற்று, தீவிரமான புயல் அலைகள் மற்றும் 200 முதல் 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை ஆகியவற்றால் ஏற் படும் அதிக ஆபத்தை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ வின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் வானிலை ஆய்வு முடிவுகள் சுட் டிக்காட்டுகின்றன. 'இருமடங்கு தீவிரத்தன்மை' கொண்ட இந்த புயல்கள் வட இந்தியப் பெருங்கடலைத் தாக்கக்கூடும் என்ற தகவல், அரசுகள், பேரிடர் மேலாண்மை அமைப்புகள் மற்றும் வானிலை ஆய்வாளர்கள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதிக அழிவை ஏற்படுத்தும்

புயல்களின் தீவிரத்தன்மை மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம், காற்றின் வேகம் ஆகியவற்றை கணக்கிடும் முறையின்படி, இந்த ஆண்டு தாக்கும் புயல்கள் அதிக அழிவை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

ஆற்றல் இழப்பு குறியீடு' மூலம் அளவிடப்பட்டதில். இவற்றின் ஒட்டு மொத்த வலிமையானது தெரியவந்துள்ளது. அனைத்து கடலோர மாநிலங் களுக்கும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளுக்கும் இஸ்ரோ முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.