Cinema and entertainment · 1 outlet covered this

லண்டனுக்கு சென்றேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்

How outlets told it

Daily Thanthi992d ago

லண்டனுக்கு சென்றேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்

Read at Daily Thanthi
லண்டனுக்கு சென்றேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்
Photo: Daily Thanthi

Published on: 12 Sep 2026, 4:20 amசென்னை, கனடாவில் நடைபெறும் டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி’ திரைப்படத்தின் திரையிடலுக்காக லண்டன் சென்றுள்ளதாக கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார். வைரலான கீர்த்தி சுரேஷ் போட்டோதமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் டோரோதி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. சினிமா பணிகளுக்காக பிசியாக சுற்றிக்கொண்டு இருக்கும் கீர்த்தி சுரேஷ் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக லண்டன் புறப்பட்டு சென்றதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவின. விமான நிலையம் ஒன்றில் கைப்பையுடன் கீர்த்தி சுரேஷ் இருக்கும் போட்டோவும் பரவின. வதந்திக்கு முற்றுப்புள்ளிலண்டனில் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல் அமைச்சர் விஜய் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் அஜித்குமார் கார் பந்தயத்தையும் தொடங்கி வைக்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை காண திரைப்பிரலங்கள் சிலர் லண்டனில் முகமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், கீர்த்தி சுரேஷும் லண்டன் சென்றதாக தகவல் பரவியது. இது குறித்த வதந்திகளுக்கு தற்போது கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தள பதிவில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கனடாவில் நடைபெறும் டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி’ திரைப்படத்தின் திரையிடலுக்காக சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ், "ஆமா கரெக்ட்.. லண்டனில் தானே டொராண்டோ பிலிம் பெஸ்டிவல் நடக்குது!" என நக்கலாக கமெண்ட் செய்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.