நாகையில் இருந்து கைநழுவுகிறது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ரூ.33,000 கோடி முதலீட்டிற்கு ஆபத்து
Read at Dinamalar1 outlet covered this
நாகையில் இருந்து கைநழுவுகிறது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ரூ.33,000 கோடி முதலீட்டிற்கு ஆபத்து
How outlets told it

/செய்திகள்/தமிழகம்/நாகையில் இருந்து கைநழுவுகிறது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ரூ.33,000 கோடி முதலீட்டிற்கு ஆபத்துADDED : செப் 12, 2026 03:08 AM ADDED : செப் 12, 2026 03:08 AM அ நிறம் | அளவுசென்னை: நாகை மாவட்டத்தில் சி. பி. சி. எல்., நிறுவனம், 33,000 கோடி ரூபாய் முதலீட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ள நிலையில், அதே திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டி ல் ஆந்திராவில் செயல்படுத்துகிறது. இதனால், நாகையில் சுத்திகரிப்பு நிலைய திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மணலியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான சி. பி. சி. எல்., எனப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு ஆண்டுக்கு, 1.05 கோடி டன் உற்பத்தித்திறன் உடைய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகம் உள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல் உள்ளிட்டவை தமிழகம் உட்பட தென் மாநிலங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்கிறது. சி. பி. சி. எல்., நிறுவனம், 'காவிரி பேசின் ரீபைனரி' நிறுவனம் பெயரில், நாகை பனங்குடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளது. இது, ஆண்டுக்கு, 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் உடையதாக இருக்கும். இதன் திட்ட செலவு, 33,023 கோடி ரூபாய். இந்நிலையில், ஆந்திராவின் நெல்லுமார் மாவட்டம் ராமாயபட்டினம் துறைமுகம் அருகில், 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு, 90 லட்சம் டன் உற்பத்தித்திறனில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கிறது. தற்போது, ஆந்திராவில் பாரத் பெட்ரோலியம், 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் அதே திட்டத்தை செயல்படுத்துவதால் அங்கு உற்பத்தியாகும் எரிபொருட்கள், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தான் விற்கப்படும். இந்த இரு நிறுவனங்களும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள். இரு ஆலைகளும் அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திராவில் ஒரே நேரத்தில் ஆலை அமைக்க அவசியம் இல்லை என, பெட்ரோலிய அமைச்சகம் கருதுகிறது. எனவே, நாகையில் சி. பி. சி. எல்., நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதில் கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆலைக்காக நாகையில் கையகப்படுத்தப்பட்டு உள்ள இடத்தில், பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சி. பி. சி. எல்.,'காவிரி பேசின் ரீபைனரி' என்ற பெயரில், நாகை பனங்குடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அறிவிக்கப்பட்டது ஆண்டுக்கு, 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் உடைய இதன் திட்ட செலவு, 33,023 கோடி ரூபாய்.