Politics · 1 outlet covered this

பிரிக்ஸ் உச்சிமாநாடு: செப்.13-ல் காலை 6 மணிக்கே தொடங்கும் தில்லி மெட்ரோ சேவைகள்!

How outlets told it

Dinamani653d ago

பிரிக்ஸ் உச்சிமாநாடு: செப்.13-ல் காலை 6 மணிக்கே தொடங்கும் தில்லி மெட்ரோ சேவைகள்!

Read at Dinamani
பிரிக்ஸ் உச்சிமாநாடு: செப்.13-ல் காலை 6 மணிக்கே தொடங்கும் தில்லி மெட்ரோ சேவைகள்!
Photo: Dinamani

புது தில்லி: பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், தேர்வுகள் எழுதும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மாநாட்டிற்குச் செல்லும் பிரதிநிதிகளின் போக்குவரத்திற்கு வசதியாக, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கே அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பொதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணிக்கு பிங்க், மெஜந்தா மற்றும் கிரே வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்குகின்றன. ஆனால், பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வழித்தடங்களிலும் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே ரயில்கள் இயக்கப்படுகிறது. தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பிரிக்ஸ் உச்சிமாநாடு காரணமாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தேர்வுகள் எழுதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் மாநாட்டிற்குச் செல்லும் பிரதிநிதிகளுக்கு வசதியாக, ஞாயிற்றுக்கிழமை அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 6 மணிக்குத் தொடங்கப்படும்" என்று கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சேவைகள் முன்னதாகவே தொடங்கப்படுவது, தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் மற்றும் பொதுமக்கள் தடையின்றியும் சரியான நேரத்திலும் பயணம் செய்வதை உறுதிசெய்ய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்சிமாநாட்டின் போது நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்பதால், மாணவர்கள் மற்றும் பிற பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.