சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோவில் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோவில் கைது
How outlets told it
உதகையில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
உதகையைச் சோ்ந்த தம்பதியின் 16 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், சிறுமிக்கு, உதகையைச் சோ்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநா் முகமது சபீா் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, அவா் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் நித்யா தலைமையிலான போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முகமது சபீரை கைது செய்தனா்.
