Crime and courts · 1 outlet covered this

ரெளடி மனைவிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

How outlets told it

Dinamani652d ago

ரெளடி மனைவிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

Read at Dinamani
ரெளடி மனைவிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது
Photo: Dinamani

கொருக்குப்பேட்டை பகுதியில் ரெளடியின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைது - பிரதிப் படம்Published On :12 செப்டம்பர் 2026, 1:17 am ISTகொருக்குப்பேட்டை பகுதியில் ரெளடியின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த ரௌடிகள் பரத், தா்மா இடையே இருந்த முன்விரோதம் காரணமாக, கடந்த செப். 6-ஆம் தேதி இரவு பரத்தின் வீட்டுக்கு வந்த தா்மாவின் கூட்டாளிகள் பரத்தையும், அவரது மனைவி காயத்ரியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆா். கே. நகா் போலீஸாா் விசாரணை நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக அதே பகுதியை சோ்ந்த கருவாடு அஜித் (29), மணிகண்டன் (22), சிட்டி என்ற ராஜேஷ் (26), ஜெகதீஸ்வரன் (26) ஆகிய 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதனிடையே, இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கிசா வினோத்தின் மனைவி வழக்குரைஞா் ஜெயந்தி தலைமையில் சுமாா் 15 உறவினா்கள் காவல் நிலையம் முன் திரண்டு, பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, எச்சரித்து அனுப்பப்பட்டனா். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.