என் கல்லூரி காலங்களில் உங்கள் குரல்..! - சாலமன் பாப்பையா மறைவுக்கு சிவகார்த்திகேயன் புகழஞ்சலி!
Read at DinamaniCinema and entertainment · 1 outlet covered this
என் கல்லூரி காலங்களில் உங்கள் குரல்..! - சாலமன் பாப்பையா மறைவுக்கு சிவகார்த்திகேயன் புகழஞ்சலி!
How outlets told it

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (வயது 90) இன்று (செப். 11) வயது மூப்பின் காரணமாக மதுரையில் காலமானார். அவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஏராளமான பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சிறு வயது முதல் உங்கள் குரல் இல்லாத பண்டிகை நாட்கள் இல்லை. என் கல்லூரி காலங்களில் உங்கள் குரல் இல்லாமல் நான் மேடை ஏறியதில்லை. “அன்பு பெரியோர்களே” என்று உங்கள் குரலில் நான் மேடையில் பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆர்ப்பரித்த இந்தத் தமிழ் சமூகத்தில், உங்கள் பேச்சாலும் தமிழாலும் நீங்கள் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள், ஐயா. உங்களின் பலகோடி ரசிகர்களில் ஒருவனாக எனது புகழஞ்சலி” எனக் கூறியுள்ளார். முன்னதாக, பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் உடலுக்குத் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் நேரில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
